ஈப்போ , அக்டோபர் 21-
இன்று அதிகாலையில் ஈப்போவை உலுக்கிய வெடி சத்தம் மற்றும் பயங்கர அதிர்வு குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
இந்த வெடி சத்தம் மற்றும் அதிர்வுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஈப்போ அருகில் உள்ள வட மாநிலங்களுக்கான உலு கிந்தா, கலாட் போலீஸ் பயிற்சி மையத்துடன் தொடர்பு கொண்டு ஆராய்ந்த போது, தங்கள் பயிற்சி மையத்தில் துப்பாக்கி வேட்டு சத்தம் தொடர்புடைய எந்தவொரு பயிற்சியும் நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாக டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
மலேசிய வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia- வும் எந்தவொரு நில அதிர்வும் ஈப்போவில் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.