கோலாலம்பூர், அக்டோபர் 21-
தீபாவளி திருநாளை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ், லிட்டல் இந்தியாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக்கடைகள் திடீரென்று அகற்றப்பட்ட விவகாரத்தில் நிலவி வந்த சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூட்டரசுப்பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 6 இந்திய வியாபாரிகளுக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட வியாபார வளாகத்தில் மேலும் மூன்று கூடாரங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேபோன்று பாதிக்கப்பட்ட இதர நான்கு வியாபரிகளுக்கும் மாற்று இடம் வழங்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு இந்திய வியாபாரிகளின் வர்ததகம் எவ்வித இடயூரின்றி சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் இந்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வியாபாரிகளின் தேர்வு மற்றம் நிர்வாக நடைமுறை உட்பட பிரிக்பில்ட்ஸில் தீபாவளி சந்தையை /ஒரு சங்கம் ஏற்று நடத்துவதாக கடந்த சனிக்கிழமை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா தெரிவித்து இருந்தார்.
சம்பந்தப்பட்ட சங்கத்திற்கு 20 கடைகள் மட்டுமே அமைப்தற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட சங்கம், அந்த எண்ணிக்கையை அதிகரித்து விட்டதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.