அக்டோபர் 23-
ஹோட்டல்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 23 மணி நேரம் தங்குவதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நிர்ணயம் செய்யுமானால் கட்டண விகிதமும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காரணம், ஹோட்டல்களில் வருகையாளர்கள் தங்குவதற்கான நேரம் அதிகரிக்கும் பட்சத்தில் கூடவே செலவினமும் அதிகரிக்கக்கூடும். இதனால் கூடுதல் செலவினத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஹோட்டல் நடத்துநர்கள் ஆளாக நேரிடும் என்று மலேசிய ஹோட்டல் நடத்துநர்கள் சங்கத்தலைவர் Datin Chiristina Toh தெரிவித்தார்.
ஹோட்டல் பராமரிப்பு செலவின உயர்வினால் ஏற்கனவே பல்வேறு சவால்களுடன் இத்துறையில் மல்லுக்கட்டி வரும் ஹோட்டல் நடத்துநர்களுக்கு, இந்த 23 மணி நேர தங்கும் அனுமதி என்பது பெரும் சிரமத்தை ஆழ்த்தும் என்பதுடன் அவர்களுக்கு இழப்பைத் தர வல்லதாகும் என்று Datin Chiristina குறிப்பிட்டார்.