பினாங்கு, அக்டோபர் 23-
இரு தினங்களுக்கு முன்பு பினாங்கு, புலாவ் திகுஷ்- ஸில் உள்ள பழக்கடையில் பாகிஸ்தானிய ஆடவரை திருப்புளியைக்கொண்டு குத்திக்கொலை செய்ததாக நம்பப்படும் பிரதான சந்தேகப்பேர்வழி, புலன் விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
இன்று காலையில் ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிதமன்றத்தில் நிறுத்தப்பட்ட 38 வயதுடைய அந்த ஆடவர், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைப்பதற்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவிர இந்த கொலையில் முக்கிய சாட்சிகள் என்று நம்பப்படும் ஒரு பெண் உட்பட மேலும் ஐவரை வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 22 வயதிலிருந்து 58 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்.