அக்டோபர் 23-
மாதாந்திர தவணைப் பணம் செலுத்தாததால் தனது காரை இழுக்க வந்த நபர்களின் செயலில் அதிருப்தியுற்ற மாது ஒருவர், கற்களினாலேயே தனது காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
அந்த மாதுவின் ஆவேசமான செயல் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தனது காருக்காக பெற்ற கடனுக்கு வங்கியில் செலுத்த வேண்டிய தவணைப்பணத்தில் அந்த மாது கடந்த எட்டு மாதங்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த மாதுவின் செயல்தொடபில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.