செலாயாங், அக்டோபர் 23-
ஆதரவற்ற இல்லங்கள் என்ற பேரில் சிறார்களை வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள GISBH எனப்படும் Globa Ikhwan Services And Business Holdings நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி நசிருட்டின் முஹமட் அலி மற்றும் அவரின் மனைவி அஸுர முகம்மது யூசோப் ஆகியோர் இன்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த தம்பதியருடன் தடை செய்யப்பட்ட அல்- அர்க்காம் சமயக் கும்பலின் முன்னாள் தோற்றுநரின் மகன் 32 வயது முஹம்மத் அடிபி அட்- தமிமி அசாரி மற்றும் இதர 19 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலையில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படட்னர்.
அனைவரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.