கிள்ளான், அக்டோபர் 23-
வங்காளதேசிகளின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வந்ததாக நம்பப்படும் விபச்சார நடவடிக்கை மற்றும் மனித கடத்தலை மலேசிய குடிநுழைவுத்துறையினர் முறியடித்துள்ளனர்.
கிள்ளானில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வலுக்கட்டாயமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக நம்பப்படும் 7 வியட்நாம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
32 க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 பெண்கள் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வந்துள்ளனர். வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அந்தப் பெண்கள், பல்வேறு துன்புறுத்தலுக்கு மத்தியில் அந்த பாலியல் தொழிலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.