திராமி வெப்பமண்டல புயல், சபா, Kudat- டிலிருந்து வட கிழக்கே 1,281 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் அடை மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு இலாகாவான Met Malaysia அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ், மணிலாவிற்கு வட கிழக்கே 395 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டு இருக்கும் இந்த திராமி வெப்பமண்டல புயல் அடை மழைக்கு வித்திடக்கூடியதாகும் என்று Met Malaysia எச்சரித்துள்ளது.
இவ்வகை புயலினால் தென்சீனாக் கடல் மற்றும் சூலு கடற்பகுதியில் கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.