கோலாலம்பூர், அக்டோபர் 23-
தங்க நகை முதலீட்டுத் திட்டம் என்று பெயரில் PA Jewellery மற்றும் Paddy Jewellery என்று இரண்டு நிறுவனங்களால் தொடங்கப்பட்ட தங்க நகை முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் ஐந்து நபர்களை கைது செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மேற்ககொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலானாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரித்தார்.
இந்த ஐந்து நபர்களில் 37வயது சித்தி ஹஜர்துல் ஐனி அப்துல் ஹமீத் என்பவது பிரதாக சந்தேகப்பேர்வழியாக திகழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.