கேபல் கார் கம்பியில் ஐவர் தொங்கிய சம்பவம்

லங்காவி,அக்டோபர் 23-

லங்காவி, குணங் மச்சிஞ்சாங் மலையில் Langkawi SkyCab கேபல் காரில் ஐவர் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்களை மீட்பதற்கு கேபள் கம்பியில் தொங்கியவாறு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் காட்சி, செயல்முறை விளக்கமாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

ஆபத்து அவசர வேளைகளில் இத்தகைய சூழல் ஏற்படும் பட்சத்தில் எவ்வாறு கேபல் காரிலிருந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது என்பதை விளக்கும் வகையில் செயல்முறை காட்சியாக அது அமைந்தது என்று லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷரிமான் ஆஷாரி தெளிவுப்படுத்தினார்.

இது Panorama Langkawi Sdn. Bhd. நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான செயல்முறை விளக்கமாகும் என்று ஏசிபி ஷரிமான் ஆஷாரி கூறினார்.

WATCH OUR LATEST NEWS