ஆலோர் ஸ்டார் ,அக்டோபர் 23-
கெடா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் மாணவர் ஒருவர், பொது மக்களிடம் அழுதே சாதித்து, கடந்த 2 ஆண்டு காலமாக கிட்டத்தட்ட 2 லட்சம் வெள்ளி வசூல் வேட்டையை நடத்தியுள்ளார் என்று பினாங்கு, செபராங் பிறையைச் சேர்ந்த சமூக நலப்பிரதிநிதி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்த மாணவனின் இந்த ஏமாற்று வேலை குறித்து சில மாதங்களுக்கு முன்பு தாம் அம்பலப்படுத்திய போது தனிநபர்களும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் அந்த மாணவருக்கு நிறைய நன்கொடைகளை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த சமூக நல அ மைப்பின் பிரதிநிதி எங் ஹியாப் பூன் என்பவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவரால் ஏமாற்றப்பட்டவர்கள், இது குறித்து போலீசில் புகார் செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.