கோலாலம்பூர், அக்டோபர் 23-
சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக கைது வேட்டையைத் தொடங்கியுள்ள குடிநுழைவு இலாகா, இன்று மாலையில் கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் வாகனப்பட்டறை மற்றும் எரிவாயு கலன்கள் விற்பனை செய்யும் வர்த்தகத்தளங்களை இலக்காக கொண்டு சோதனையிட்டதில் 32 பேர் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்.
குடிநுழைவு அதிகாரிகளின் வரவைக் கண்டு, பலர் தப்பிக்க முயற்சி செய்த போதிலும் பலர் வைளத்துப்பிக்கப்பட்டனர். இந்த சோதனை உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் வாழ்க்கைச்செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவு இலாகாவின் இயக்குநர் வான் முகமது சௌபி தெரிவித்தார்.
பிடிபட்ட 32 பேரில் 31 பேர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் அவர் விளக்கினார்.