மலேசியா
2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி
ஸ்காட்லாந்து நாட்டின் Glasgow நகரில் ஜுலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. செலவினத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்த பன்னாட்டு விளையாட்டுப்போட்டியில் பேட்மிண்டன் உட்பட 10 விளையாட்டுப் போட்டிகள் அகற்றப்பட்டு இருப்பது மூலம் மலேசியா 16 தங்கப்பதக்கங்களை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியை ஏற்று நடத்தும் Glasagow-வின் முடிவை மலேசியா மதிக்கிறது. ஆனால், முக்கிய விளையாட்டுகள் அகற்றப்பட்டு இருப்பது மூலம் அவற்றில் பதக்கங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அவற்றை இழக்க வேண்டிய நிலைக்கு மலேசியா ஆளாகியிருப்பதாக இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
எனினும் பதக்கங்களை பெறுவதற்கான வாய்ப்புக்குரிய இதர விளையாட்டுப்போட்டிகளில் மலேசியா தீவிர கவனம் செலத்தும் என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
பூப்பந்தாட்டம் நீக்கப்பட்டது குறித்து பெரும்பாலான மலேசியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.