கோலாலம்பூர், அக்டோபர் 23-
நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானங்கள், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது தொடர்பாக இவ்வாண்டில் இதுவரை 18 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசர தரையிறக்கத்திற்குரிய இச்சம்பவங்கள் பெரும்பாலும் விமான இயந்திரக்கோளாறுகள், தொழில்நுட்பக்கோளாறுகள், அவசர மருத்துவ உதவி முதலிய காரணங்கள் அடிப்படையில் நிகழ்ந்துள்ளன.
பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, புறப்பட்ட சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்ட விமானங்கள் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகியுள்ளன என்று நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு போக்குவரத்து அமைச்சு மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளது.