செர்டாங்,அக்டோபர் 23-
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் இது போன்ற போக்கு தொடர்வது உடனடியாக களையப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
படிக்கும் காலத்திலேயே இது போன்ற எதிர்மறையான சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் உருவாகாமல் இருக்க அவர்களுக்கு நல்லுரைகள் வழங்குவதிலும், அத்தகைய மனப்பான்மை வளர்வதை தடுப்பதற்கும் பெற்றோர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இன்று செர்டாங்கில் மனோவியல் சுகாதார சமூக புத்தாக்கப் போட்டியை தொடக்கிவைத்து உரையாற்றுகையில் அமைச்சர் ஃபத்லினா சிடெக் இதனை தெரிவித்தார்.