பத்து காஜா , அக்டோபர் 24-
புதியதாக அறிமுகமான நண்பருடன் வெளியே சென்ற மூன்றாம் படிவ மாணவி ஒருவரை, ஐவர் அடங்கிய இளையோர் கும்பல், பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை பேரா, பத்துகாஜாவில் ஒரு தங்கும் விடுதியில் நிகழ்ந்துள்ளது. மதியம் பள்ளிக்கு செல்வதாக சென்ற தனது மகள், வீடு திரும்பாதது குறித்து என்று அந்த மாணவியின் தாயார் போலீசில் புகார் செய்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, அந்த மாணவி, கும்பல் ஒன்றினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது என்று பேரா மாநில போலீஸ் துணைத் தலைவர் உதவி கமிஷனர் சுல்காஃப்லி சரியாத் தெரிவித்தார்.
15 வயதுடைய மாணவிக்கு அப்போதுதான் தனக்கு அறிமுகமான ஆடவருடன் வெளியே சென்ற போது, அங்கு காத்திருந்த அந்த நபரின் சக நண்பர்களிடம் சிக்கி, அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 18 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக சுல்காஃப்லி சரியாத் குறிப்பிட்டார்.