தீபாவளிக்கு இந்திய மாணவர்களுக்கு போதுமான விடுமுறை வேண்டும்

கோலாலம்பூர், அக்டோபர் 24-

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு போதுமான விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கேட்டுக்கொண்டார்.

உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும் வெளியூரைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் தத்தம் ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்று சேர்வதை உறுதி செய்வதற்கு அவர்களுக்கு போதுமான விடுமுறை வழங்கப்பட்டால் மட்டுமே தேவையான பயண ஏற்பாடுகளை அவர்களால் முன்கூட்டியே செய்து கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு Bank Rakyat வங்கி கட்டடத்தில் தீபாவளியை கொண்டாடும் ஊடகத்துறையினருக்கு உபசரிப்பை வழங்கியப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS