பட்டர்வொர்த்,அக்டோபர் 24-
அந்நிய நாட்டவர்கள், விமான நிலையத்தில் சோதனையின்றி வெளியேறுவதற்கு குடிநுழைவு முகப்பிடங்களில் செட்டிங் முறை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குடிநுழைவு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் வங்ளாதேச ஆடவர் ஒருவர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
35 வயது அலிஃப் கான் என்ற அந்த வங்காளதேசி, நீதிபதி சுல்ஹாஸ்மி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குடிநுழைவுத்துறையின் கருப்புப்பட்டியிலிருந்து எண்டாங் ரிஸ்தாவதி என்பவரின் பெயரை அகற்றுவதற்கு அவரிடமிருந்த 2 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக அந்த நபர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த நபர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பினாங்கில் ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.