2 லட்சம் வெள்ளி வரை வசூல் வேட்டை நடத்திய அந்த பல்லைக்கழக மாணவர் வளைத்துப்பிடிக்கப்பட்டார்

குபாங் பாசு,அக்டோபர் 24-

பல்கலைக்கலைக்கழக கட்டணம், மருத்துவக்கட்டணம், ஆலோங் கடன் என்று பல்வேறு பொய், புரட்டுகளை கட்டவிழ்த்து விட்டு, பொது மக்களின் அனுதாபத்தை பெற்று, தனிநபர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட இயக்களிடமிருந்து 2 லட்சம் வெள்ளி வரை வசூல் வேட்டை நடத்தியதாக நம்பப்படும் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் போலீசாரிடம் பிடிபட்டான்.

கெடாவில் உள்ள ஒரு பல்லைக்கழகத்தில் பயின்று வரும் 23 வயதுடைய அந்த மாணவனின் இந்த ஏமாற்று வேலை குறித்து பினாங்கில் உள்ள அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த மாணவன் வளைத்துப்பிடிக்கப்பட்டான்.

கெடா, ஜித்ராவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த மாணவனை விசாரணைக்கு ஏதுவாக இரண்டு நாள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

WATCH OUR LATEST NEWS