கோலாலம்பூர், அக்டோபர் 24-
இந்துப்பெருமக்கள் அடுத்த வாரம் தீபாவளி திருநாளை கொண்டாடுகின்றனர். தீபாவளி திருநாளை முன்னிட்டு எட்டுப்பொருட்கள், விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்சைச் செலவின அமைச்சர் Datuk Armizan Mohd Ali தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிவப்பு நிற சிறுவெங்காயம், சிவப்பு மிளகாய், ஆஸ்திரேலியா ஆட்டிறைச்சி, தேங்காய் பால், தக்காளிப்பழம் உட்பட எட்டுப்பொருள் விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் அக்டேபார் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மேற்கண்ட பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அமைச்சர் Datuk Armizan இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு பொருட்களின் விலையை கண்மூடித்தனமாக உயர்த்தும் பொறுப்பற்ற விபாயாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பொருட்களின் விலையை கண்காணிப்பதற்கு நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.