கோலாலம்பூர், அக்டோபர் 24-
தனது 13 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்து, குழந்தையை பிரசவிக்கும் அளவிற்கு பாலியல் வன்கொடுமை புரிந்து வந்த நபர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பு அளித்தது.
ஒரு வேன் ஓட்டுநரான 59 வயது நபர், பிடிபட்ட நாளான அக்டோபர் 11 ஆம் தேதியிலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தஸ்னிம் அபு பக்கர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி, வங்சா மாஜு, ஸ்தாபாக் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.