ஜொகூர், அக்டோபர் 24-
ஆடவர் ஒருவர் உடலில் 16 கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு 7.25 மணியளவில் ஜோகூர்பாரு, தமன் அபாத் அருகில் ஒரு கடை வீட்டில் அந்த நபர் உடல் முழுவதும் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்த கிடந்தது குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீசார் அவ்விடத்திற்கு விரைந்ததாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜிட் ஹூய் தெரிவித்தார்.
உயிரிழந்த நபர் 50 வயதுடைய அந்நிய நாட்டவர் என்று அடையாளம் கூறப்பட்டது. கொலையாளி மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.