கோலாலம்பூர், அக்டோபர் 24-
LRT ரயில் சேவையின் கிளானா ஜெயா வழித்தடத்திற்கான சேவைத் தரம் உயர்த்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பயணிகள் அதிகளவில் சேவையைப் பயன்படுத்தும் உச்சக்கட்ட நேரத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற தற்போதைய முறை, அடுத்த ஆண்டில் 2.8 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்று அதன் சேவைத்தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையில் ஈடுபடுத்தப்படும் LRT ரயில் சேவை, பயணிகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.