கோலாலம்பூர், அக்டோபர் 24-
மஜ்லிஸ் அமானா ரக்யாத் எனப்படும் மாராவில் கடன் பெற்ற மாணவர்களில் 97 ஆயிரத்து 866 பேர் அல்லது 49 விழுக்காட்டினர், தாங்கள் பெற்ற கடனை இன்னும் செலுத்தவில்லை என்று புறநகர், வட்டார மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் ரூபியா வாங் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் பெற்ற கடனை செலுத்த தவறியதால் அவர்கள் தற்போது கறுப்புப்பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக பல மாதங்கள் தங்கள் கடனை செலுத்தாமல் இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதில் அளிக்கையில் ரூபியா வாங் இவ்வாறு குறிப்பிட்டார்.