கோலாலம்பூர், அக்டோபர் 24-
உலகின் மொத்த வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் BRICS அமைப்பின் பங்காளி நாடாக மலேசியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
அந்த அமைப்பின் பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட்ட 13 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
பதிமூன்று நாடுகள் BRICS அமைப்பில் முழு உறுப்பினராக இன்னும் ஆகாவிட்டாலும் அவை பங்காளி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அந்த கூட்டமைப்பின் BRICS INFO எனும் எக்ஸ் தளம் கூறியது.
மலேசியாவை தவிர்த்து, அல்ஜீரியா, Belarus, கியூபா, இந்தோனேசியா, கஸகஸ்தான், Bolivia., நைஜீரியா, தாய்லாந்து, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பின் பங்காளி நாடுகளாக ஆகியுள்ளன.
பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி பிரேசில் அதிபர் Luiz Inacio Lula da Silva-வுடன் நடத்திய சந்திப்பின் போது வெளிப்படுத்தியிருந்தார்.