நீலாய், அக்டோபர் 25-
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் வாரியத்தின் கீழ் மணல் சுரங்க குத்தகை மீதான விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான SPRM- மிற்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.
எனினும் இதனைத் தங்களால் தற்போது வெளியிட முடியாது. காரணம், சாட்சிகளிடம் இருந்து போதுமான தகவல்களைத் தாங்கள் தற்போது திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்து இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து போதுமான ஆதாரங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். உரிய தருணம் வரும் போது இவ்விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
இதற்கு முன்பு மந்திரி பெசார் வாரியத்தின் முன்னாள் தலைமைச் செயல் முறை அதிகாரி கைது செய்யப்பட்டு 7 நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட வேளையில் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.