செபாங் , அக்டோபர் 25-
எத்தியோப்பியா பிரதமர் டாக்டர் அபி அஹ்மத் அலி, மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு, இன்று வெள்ளிக்கிழமை காலையில் கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்.
12 கோடியே 65 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் முதன்மை தலைவரான டாக்டர் அபி அஹ்மத் அலி, க்கு இது முதலாவது மலேசிய வருகையாகும்.
தமது துணைவியார் Zinash Tayachew-விடன் வருகை புரிந்து இருக்கும் டாக்டர் அபி அஹ்மத் அலி, மலேசியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை வலுப்படுத்தும் நோக்கில் அவரின் இந்த முதலாவது வருகை அமைந்துள்ளது.
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் Komplex Bunga Raya-வை காலை 8.30 மணியளவில் அவரின் சிறப்பு விமானம் வந்தடைந்தது.
டாக்டர் அபி அஹ்மத் அலி-யையும், அவரின் துணைவியாரையும் எரிபொருள், நீர் உருமாற்று துணை அமைச்சசர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் மற்றும் வெளியுறவு அமைச்சின் முதல் நிலை அதிகாரிடத்தோ யுபாஸ்லான் யூசோப் எதிர்கொண்டு வரவேற்றனர்.