ஈப்போ , அக்டோபர் 25-
சுற்றுலா பேருந்து ஒன்று, டிரெய்ல் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11 ஜப்பானிய சுற்றுப்பயணிகள் உட்பட 13 பேர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகலில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 230.3 ஆவது கிலோ மீட்டரில் தைப்பிங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளாகியவர்களில் பேருந்து ஓட்டுநரும், சுற்றுலா வழிகாட்டியும் அடங்குவர் என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபோரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.
காயமுற்ற சுற்றுப்பயணிகள் அனைவரும் தைப்பிங் மருத்தமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்