போர்ட் டிக்சன் ,அக்டோபர் 25-
சாலையைக் கடந்து கொண்டிருந்த 5 ஆம் ஆண்டு மாணவனை மோதித்தள்ளி, காயம் விளைவித்ததாக நம்பப்படும் காரோட்டி ஒருவர், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.
நேற்று காலை 7.10 மணியளவில் போர்ட்டிக்சனில் உள்ள ஒரு தேசிய தொடக்கப்பள்ளி முன்புறம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Perodua Myvi ரக வாகனத்தினால் மோதப்பட்ட மாணவன், கால்முறிவுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்
பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு ஏதுவாக வாகனங்களுக்கான சிவப்பு நிற சமிக்ஞை விளக்கையும் பொருட்படுத்தாமல் அந்த 28 வயதுடைய அந்த காரை செத்தியதாக கூறப்படுகிறது.
அந்த காரோட்டி போர்ட்டிக்சனிலிருந்து தெலுக் கெமாங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த நிகழ்ந்த இச்சம்பவத்தில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உதீன் தெரிவித்தார்.