கிள்ளான்,அக்டோபர் 25-
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி கிள்ளான், பந்தர் புக்கிட் டிங்கி சாது-வில் 12 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விபச்சாரக் கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமி, அன்றைய தினமே போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும் அந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் தொடர்ந்து போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு ஆளாகியுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
அந்த சிறுமியை கடத்திச் செல்லும் முயற்சியில் மொத்தம் 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.