ஈப்போ , அக்டோபர் 25-
சுற்றுலா பேருந்து ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11 ஜப்பானிய சுற்றுப்பயணிகள் உட்பட 13 பேர் காயமுற்ற சம்பவத்தில் தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் ஒரு ஜப்பானியப் பிரஜை உயிரிழந்தார்.
நேற்று பிற்பகலில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 230.3 ஆவது கிலோ மீட்டரில் தைப்பிங்கிற்கு அருகில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காயமுற்ற இதர பயணிகள் அனைவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த சுற்றுலா பேருந்து, பினாங்கிலிருந்து கேமரன்மலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ததாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த ஜப்பானியர் 70 வயது மூதாட்டி என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.