மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

புத்ராஜெயா,அக்டோபர் 25-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தையொட்டிய நிகழ்வுகள், அடுத்த மாதம் 22 ஆம் தொடங்கி, மூன்று தினங்களுக்கு கோலாலம்பூர் மலேசிய அனைத்துலக கண்காட்சி மற்றும் வர்த்தக மையத்தில் நடைபெறவிருக்கின்றன..

இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட நாளை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS