கேமரன்மலை சாலையில் நிலச்சரிவு, பிரதான சாலை மூடப்பட்டது

ஈப்போ,அக்டோபர் 25-

ஈப்போ,ஜாலான் சிம்பாங் புலை – கேமரூன் ஹைலேண்ட்ஸ் சாலையின் 43 ஆவது கிலோமீட்டரில் இன்று பிற்பகல் 5 மணியளவில் நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்தது.

மண்ணும், பாறைகளும் பிரதான சாலையில் குவிந்து கிடப்பதால் ஜாலான் சிம்பாங் புலை – கேமரூன் ஹைலேண்ட்ஸ் சாலையின் இரு மருங்குகளும் அனைத்து வகையான போக்குவரத்துக்கும் மூடப்பட்டன..

பொதுப்பணி இலாகாவினர், அந்த சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றி சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இரு வழி சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிதீன் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

அப்பகுதியில் இன்னமும் மண் நகர்ச்சியிருப்பதால் வாகனமோட்டிகள் தற்போதைக்கு அந்த சாலையை பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. மாற்று சாலையாக ஜாலான் சிம்பாங் புலை – கேமரூன் ஹைலேண்ட்ஸ் சாலையை பயன்படுத்துமாறு வாகனமோட்டிகளுக்கு ஏசிபி அபாங் ஜைனல் அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS