கிளந்தான் , அக்டோபர் 25-
கிளந்தான், குவா மூசாங் சாலையில் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட கோர விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்.
இதில் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். Perodua Myvi காரில் பயணம் செய்த 48 வயது ஜுனைசி ஜூசோ,39 வயது ஷாஸ்வான் இஸ்மாயில், 35 வயது ஃபர்ஹானா இஸ்மாயில் , 20 வயது முகமது ஃபக்ருல் டேனிஷ் மற்றும் லோரி ஓட்டுநரான 53 வயது G. மகேஸ்வரன் ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர் என்று அடையாளம் கூறப்பட்டது.
ஜாலான் குவா முசாங் – லோஜிங் என்ற இடத்தில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பாக தகவல் பெற்று 15 நிமிடத்தில் சம்பவ இடத்தை சென்றடைந்த தீயணைப்பு, மீட்புப்டையினர், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தி வாகனங்களின் இடிப்பாடுகளிலிருந்து ஐவரின் உடலையும் மீட்டனர் என்று அவ்விலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.