கோலா சிலாங்கூர் , அக்டோபர் 25-
கிள்ளான் பள்ளத்தாக்கில், இன்று பிற்பகலில் வீசிய பலத்த காற்று மற்றும் கனத்த மழையில் விளம்பரப்பலகை ஒன்று கார்கள் மீது சரிந்து விழுந்ததில் மாது ஒருவர் அதிர்ஷ்டசவசமாக உயிர்த்தப்பினார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.44 மணியளவில் ஷால் ஆலம், பந்தர் புஞ்சக் ஆலம், பூசட் பெர்னியாகன் ஆலம் ஜெயா வில் நிகழ்ந்தது. இதில் மொத்தம் 6 வாகனங்கள் சேதமுற்றன.
பேரங்காடி மையம் ஒன்றின் அருகில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30.48 மற்றும் 6.09 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட அந்த விளம்பரப்பலகை, பலத்த காற்றின் காரணமாக தூணுடன் ஆட்டம் கண்டு கார்கள் மீது விழுந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
இதில் விளம்பரப்பலகையுடன் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 45 மாதுவை தீயணைப்புப்படையினர் பாதுகாப்பாக மீட்டனர் என்ற அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.