ஜெரிக் , அக்டோபர் 26-
சொந்த மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நம்பப்படும் 42 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேரா, ஜெரிக், பெர்சியா என்ற இடத்தில் தனது சொந்த தந்தையால் பாலியல் பலாத்காரம் புரியப்பட்டதாக 14 வயது பெண் கடந்த வியாழக்கிழமை இரவு செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக ஜெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார்.
மருத்துவப் பரிசோதனைக்காக அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வேளையில் கைது செய்யப்பட்ட நபர், குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.