சிரியா ராணுவத் தளம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்

இஸ்‌ரேல்,அக்டோபர் 26-

சிரியாவின் மத்திய, தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவத் தளங்கள் மீது இஸ்‌ரேல் இன்று அதிகாலையில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இத்தகவலை சிரியா அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இஸ்‌ரேல் தனது வசமுள்ள Golan Heights பகுதியிலிருந்தும் லெபனானில் உள்ள சில பகுதிகளிலிருந்தும் சிரியாவை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக சிரியா கூறியது.

இத்தகவலை சிரியா அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இஸ்‌ரேல் பாய்ச்சிய ஏவுகணைகளைத் தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக அது தெரிவித்தது.

இந்நிலையில், சிரியா தலைநகர் Damascus-சில் வெடிப்புகள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS