விபத்தில் கணவன், மனைவி பலி, மகன் படுகாயம்

குவாந்தன்,அக்டோபர் 26-


கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த மண்வாரி இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களின் மகன் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பகாங், ஜாலன் குவாந்தன் – மாறன் சாலையின் 10 ஆவது மைலில் அரச மலேசிய ஆகாயப்படைத்தளத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

விருப்புரிமையின் பேரில் பணி ஓய்வுப்பெற்றவரான 42 வயது முகமது ஃபதில் முகமது அபிதீன் மற்றும் அவரின் 50 வயது மனைவி ரோஹாஃபிசா தாஹா ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.

அவர்களின் மகன் கடும் காயங்களுக்கு ஆளாகி குவாந்தன், தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்குடும்பத்தினர் திரெங்கானு, கெமாமன் அருகில் தமன் கெலிங்க பெசார்- என்ற முகவரியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசுதெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS