தீபாவளிக்கு முன்னும் பின்னும் பதிவற்ற விடுப்பு

கோலாலம்பூர், அக்டோபர்

பொதுச் சேவைத்துறையில் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆண்டு தொடங்கி தீபாவளிக்கு முந்தைய நாள் அல்லது கொண்டாட்டத்தின் இரண்டாவது நாளில் தீபாவளி பண்டிகையுடன் இணைந்து ஒரு நாள் பதிவற்ற விடுப்பான CTR எடுக்க வேண்டிய நாளை தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CTR ஆரின் பயன்பாடு அந்தந்த அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உட்பட்டது என்றும், இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநில பொது சேவை துறைகள் , சட்டரீதியான அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் பொது சேவைத் துறை நேற்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்பில், தீபாவளி தினத்தன்று பொது விடுமுறையாக இருக்கும் மாநிலங்களில் பணியாற்றும் பொது சேவைத்துறை அதிகாரிகளுக்கான ஒரு நாள் CTR பதிவற்ற விடுப்பு, அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமை அல்லது நவம்பர் முதல் தேதி வெள்ளிக்கிழமை எடுக்கலாம் என்று பொதுச்சேவைத்துறை அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது..

WATCH OUR LATEST NEWS