வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம், வழக்கறிஞர் மன்றம் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 26-

கடந்த செவ்வாய்க்கிழமை பினாங்கில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மலேசிய வழக்கறிஞர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரும்புத்தடியால் அந்த வழக்கறிஞரை தாக்கியதில் அவர் தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

ஜார்ஜ்டவுனை தளமாக கொண்ட அந்த வழக்கறிஞர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பினாங்கு, கர்பால் சிங் டிரைவ் தளத்தில் தாக்கப்பட்டுள்ளார். இதனை மலேசிய வழக்கறிஞர் மன்றம் கடுமையாக கருதுவாக அதன் தலைவர் எஸ்ரி அப்தில் வஹாப் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS