ஜார்ஜ் டவுன்,அக்டோபர் 26-
பினாங்கில் கடந்த செவ்வய்க்கிழமை பெர்சியாரன் கர்பால் சிங் 2 இல் ஒரு கோப்பிக் கடையின் முன்புறம் வழக்கறிஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அன்றைய தினம் காலை 9.50 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய அந்த வழக்கறிஞர், இரண்டு நபர்களால் தாக்கப்பட்டு, தலையில் 7 தையல்கள் போடப்பட்டுள்ளதாக திமூர் லாட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ஸ்வீ சேக் குறிப்பிட்டார்.
இரும்புத்தடியினால் அந்த வழக்கறிஞரை தாக்கிய இரு நபர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு பின்னணியில் மூளையாக இருந்து ஒரு நபர் செயல்பட்டு இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அவர் விளக்கினார்.
அந்த வழக்கறிஞரை தாக்குவதற்கு காரில் வந்த அந்த இரு நபர்கள் பயன்படுத்திய வாகனப்பதிவு எண், போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.