கோலாலம்பூர்,அக்டோபர் 26-
1MDB நிதி முறைகேடு தொடர்பில் பொது மக்களிடம் மன்னிப்புக்கோரி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பகிரங்கமாக வெளியிட்ள்ள அறிக்கை,நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும் என்றுபாசிர் குடாங், பிகேஆர் நாடளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
நஜீப்பிற்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அது இன்னும் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்ட நிலையில் உள்ளது.
இவ்வழக்கில் பிராசிகியூன் தனது வழக்கு விசாரணையை முடித்துக்கொண்ட போதிலும், நஜீப்பை எதிர்வாதம் செய்ய அழைப்பதா? அல்லது விடுதலை செய்வதா? என்பது குறித்து முடிவெடுப்பதற்கு நீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில், அதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள நஜீப், முந்திக்கொண்டு பகிரங்க அறிக்கை வெளியிட்டு இருப்பது SUBJUDICE என்று ஒரு சட்ட நிபுணருமான Hassan Abdul Karim தெரிவித்தார்.
நஜீப் சம்பந்தப்பட்ட 1MDB வழக்கில் அவருக்கு எதிராக முகாந்திரங்கள் உள்ளனவா? என்பது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தற்போது மதிப்பீடு செய்து வரும் வேளையில் நஜீப், தானே கழுத்தைக்கொடுப்பதைப் போல் உள்ளது.
இவ்வழக்கில் நஜீப் விடுதலை செய்யப்படலாம். அல்லது எதிர்வாதம் புரிய அழைக்கப்படலாம். நிலைமை இவ்வாறு இருக்க நஜீப்பின் இந்த பகிரங்க மன்னிப்பும், அறிக்கையும் நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு ஒப்பாகும் என்று ஹசன் அப்துல் கரீம் குறிப்பிட்டார்.