புத்ரஜயா , அக்டோபர் 26-
தனது சொந்த பெற்றோரால் சித்ரவதை செய்யப்படுவதைப் போல காணொளி ஒன்று சமூக வலைத்தளஙகளில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த சிறுமியை சிலாங்கூர் மாநில சமூக நல இலாகா நேற்று மீட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட சமூக நல இலாகா, அந்த சிறுமியை மீட்டதுடன் மருத்துவப் பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சித்ரவதை சம்பவம் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டம் 25 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.