OUM- மில் பட்டம் பெற்றார் தீனா முரளிதரன்

கோலாலம்பூர் , அக்டோபர் 26-

தேசிய இளம் பேட்மிண்டன் வீராங்கனையான தீனா முரளிதரன், OUM எனப்படும் Open University Malaysia பல்கலைக்கழகத்திலிருந்து கல்வித்துறையில் இளங்கலைப்பட்டத்தைப் பெற்றார்.

இரண்டாவது மொழியான ஆங்கில மொழி கற்பித்தலில் சிறப்பு மதிப்பு பெண்களுடன் தீனா, இந்த இளங்கலைப்பட்டத்தை பெற்றளார்.

இதனை OUM பல்கலைக்கழகம் தனது முகநூலில் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் மட்டுமின்றி, விளையாட்டுத்துறைக்கான ஐகோன் விருதையும் அப்பல்லைக்கழகத்தின் சிறப்பு விருதாக தீனா பெற்றார்.

தவிர கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை கல்வித் தவணைக்கான OUM-மின் உபகாரச்சம்பளத்தையும் தீனா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS