பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 26-
லஞ்ச ஊழல் காரணமாக 12 ஊராட்சி மன்றங்களின் நட்சத்திர அந்தஸ்து தரம் இறக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
2024 முதல் 2028 வரையிலான லஞ்ச உழல் துடைத்தொழிப்பு வியூக குறியீட்டிற்கு ஏற்ப லஞ்சமில்லா செயல்பாட்டுத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.
முன்பு ஊராட்சி மன்றங்களின் தரம் 5 நட்சத்திரங்களாக உயர்த்தப்பட்டு இருந்தன. லஞ்ச ஊழல் புழக்கம் காரணமாக அவற்றின் தரம் 4 நட்சத்திர அஸ்தஸ்துக்கு தரம் இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.