புத்ரஜயா,அக்டோபர் 26-
தீபாவளி திருநாளை கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள உயர் கல்விக்கூடங்களைச் சேர்ந்த இந்து மாணவர்கள், மற்றும் போதனையாளர்கள் கற்றல் கற்பித்தலை PdP ஓன்லைன் முறை மூலமாக மேற்கொள்வதற்கு உயர் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இலாகாக்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் முதல் தேதி வரை இந்து மாணவர்கள், PdP வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று உயர்க்கல்விக்கூட அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்து மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி, குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்வதற்கு ஏதுவாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.