கோலாலம்பூர் , அக்டோபர் 26-
அரச பேராளர்கள் இருவருடன் தொடர்புப்படுத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து இரு தனிநபர்கள் நீதிக்காக காத்திருக்கும் பட்சத்தில் இது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் லதீபா கோயா கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவியல் வழக்குகளில் நீதிக்கோரும் அமைப்பு முறையில் கடமைகளை செய்யத் தவறும் பட்சத்தில் அது குறித்து அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படுவது மிக முக்கியமானதாகும்.
குறிப்பாக, விளக்கம் கோருவதற்கு போலீசாரையும், அமைச்சரையும் அழைக்கக்கூடிய அதிகாரம், அரச விசாரணை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது என்று லதீபா கோயா விளக்கினார்.