கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது

நிபோங் டெபால் , அக்டோபர் 26-

பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் தொல்லை விவகாரங்களை கையாளுவதில் கல்வி அமைச்சு ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கையாளாது என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள், பாலியல் தொல்லைப் பிரச்னைகளை எதிர்நோக்கும் பட்சத்தில் அவர்கள் துணிந்து புகார் செய்வதை ஊக்கவிக்கும் வகையில் பாலியல் தொல்லை மீதான வழிகாட்டல்முறையை கல்வி அமைச்சு மேலும் வளப்படுத்தவிருக்கிறது என்று ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உட்பட பள்ளியின் அனைத்து தரப்பினரும் கூட்டு கடப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இன்று சனிக்கிழமை, பினாங்கு, சுங்கை பகப்தேசியப் பள்ளியில் மடானி சமூகத்தின் தொழில் கல்வித்திட்டம் தொடர்பான கண்காட்சியை தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS