ஜோகூர்பாரு,அக்டோபர் 26-
ஜோகூர்பாருவில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் இன்னமும் புலன் விசாரணையில் இருந்து வருவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் குமார் முத்துவேல் தெரிவித்தார்.
அந்த வர்த்தகரின் குடும்ப உறுப்பினர் உட்பட இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், வரும் அக்டேபார் 29 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதிப் பெறப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
எனினும் இந்த கடத்தல் தொடர்பில் புதிதாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இன்று ஜோகூர் பாருவில் Jalan Trus-ஸில் தீபாவளி சந்தையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ குமார் மேற்கண்டவாறு கூறினார்.