காஜாங்,அக்டோபர் 28-
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று காஜாங், பந்தர் டெக்னாலஜி கஜாங்- கில் ஓர் உணவுக்கடையில் பன்றித் தலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
35 மற்றும் 51 வயதுடைய அந்த இரு நபர்களும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி போலீஸ் புகார் ஒன்றை தாங்கள் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
தமக்கு சொந்தமான உணவகத்தில் ரொட்டி சானாய் பிசையும் மேஜையில் அந்த பன்றித் தலை வைக்கப்பட்டிருந்ததாக சம்பந்தப்பட்டவர் புகார் அளித்து இருப்பதாக ACP Nazron மேலும் கூறினார்.
